3180சீலம் இல்லாச் சிறியனேலும் செய்வினையோ பெரிதால்
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா என்று என்று
காலந்தோறும் யான் இருந்து கைதலைபூசல் இட்டால்
கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே             (1)