3183காண வந்து என் கண்முகப்பே தாமரைக்கண் பிறழ
ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்று என்று
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காணமாட்டாப் பீடு உடை அப்பனையே?             (4)