3186அறிந்து அறிந்து தேறித் தேறி யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தியாயை நின்மலமாக வைத்து
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன்
நறுந் துழாயின் கண்ணி அம்மா நான் உன்னைக் கண்டுகொண்டே             (7)