முகப்பு
தொடக்கம்
3192
மணி மாமை குறைவு இல்லா மலர்மாதர் உறை மார்பன்
அணி மானத் தட வரைத்தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணிமாயன் கவராத மட நெஞ்சால் குறைவு இலமே (2)