32நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்
வாள் கொள் வளைஎயிற்று ஆருயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே
      சுரிகுழலீர் வந்து காணீரே            (11)