3204கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை! கடல்வண்ணா அடியேனைப்
பண்டேபோல் கருதாது உன் அடிக்கே கூய்ப் பணிக்கொள்ளே             (3)