3209காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினில் கழித்து என்னை உன் கொழும் சோதி உயரத்துக்
கூட்டு அரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?             (8)