3214நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும்
      முன் படைத்தான்
வீடு இல் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன்
      மேவி உறை கோயில்
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய
      திருக்குருகூர் அதனைப்
பாடி ஆடி பரவிச் செல்மின்கள்
      பல் உலகீர் பரந்தே             (2)