முகப்பு
தொடக்கம்
3215
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று
உடனே விழுங்கி
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது
கண்டும் தெளியகில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும்
திருக்குருகூர் அதனுள்
பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம்
மற்று இல்லை பேசுமினே (3)