முகப்பு
தொடக்கம்
3216
பேச நின்ற சிவனுக்கும் பிரமன்
தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நல் மோக்கத்துக்
கண்டுகொண்மின்
தேச மா மதிள் சூழ்ந்து அழகு ஆய
திருக்குருகூர் அதனுள்
ஈசன்பால் ஓர் அவம் பறைதல் என் ஆவது
இலிங்கியர்க்கே? (4)