முகப்பு
தொடக்கம்
3218
போற்றி மற்று ஓர் தெய்வம் பேணப்
புறத்திட்டு உம்மை இன்னே
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால்
உலகு இல்லை என்றே
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு
திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது
அறிந்து அறிந்து ஓடுமினே (6)