முகப்பு
தொடக்கம்
3219
ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து
மற்று ஓர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படிகால்
வழி ஏறிக் கண்டீர்
கூடி வானவர் ஏத்த நின்ற
திருக்குருகூர் அதனுள்
ஆடு புள் கொடி ஆதி மூர்த்திக்கு
அடிமைபுகுவதுவே (7)