3220புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட
      மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது
      நாராயணன் அருளே
கொக்கு அலர் தடம் தாழை வேலித்
      திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத்
      தெய்வம் விளம்புதிரே             (8)