முகப்பு
தொடக்கம்
3221
விளம்பும் ஆறு சமயமும் அவைஆகியும்
மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய
ஆதிப்பிரான் அமரும்
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய
திருக்குருகூர் அதனை
உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை
உய்யக்கொண்டு போகுறிலே (9)