3222உறுவது ஆவது எத் தேவும் எவ் உலகங்களும்
      மற்றும் தன்பால்
மறு இல் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும்
      நின்றவண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு
      திருக்குருகூர் அதனுள்
குறிய மாண் உரு ஆகிய நீள் குடக்
      கூத்தனுக்கு ஆள் செய்வதே             (10)