3223ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்
      வண் குருகூர்நகரான்
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன்
      மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள்
      இப் பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர்
      மற்றது கையதுவே             (11)