3227என் கொள்வன் உன்னை விட்டு? என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்து கண்ண நீர் கரந்து
நின்கண் நெருங்கவைத்தே எனது ஆவியை நீக்ககில்லேன்
என்கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே             (4)