3234கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங்கண்ணன் தன்னை
ஏர் வள ஒண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆர்வண்ணத்தால் உரைப்பார் அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே (11)