முகப்பு
தொடக்கம்
3242
இறுக்கும் இறை இறுத்து உண்ண
எவ் உலகுக்கும் தன் மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக
அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன்
பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்
மேவித் தொழுது உய்ம்மின் நீரே (8)