3247என் செய்யும் ஊரவர் கவ்வை தோழீ இனி நம்மை?
என் செய்ய தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி
என் செய்ய வாயும் கருங் கண்ணும் பயப்பு ஊர்ந்தவே             (2)