327கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள்முடியன்
எதிர் இல் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
அதிரும் கழற் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டார் உளர்            (1)