3271நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று
      அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
பூந் தண் மாலைத் தண் துழாயும்
      பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும்
      பாவியேன் பக்கத்தவே             (4)