3272பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று
      அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும்
      நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன்
      ஆவியின் மேலனவே             (5)