முகப்பு
தொடக்கம்
3273
மேலும் வன் பழி நம் குடிக்கு இவள் என்று
அன்னை காணக்கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக்
கண்ணும் கனி வாயும்
நீல மேனியும் நான்கு தோளும்
என் நெஞ்சம் நிறைந்தனவே (6)