3274நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று
      அன்னை காணக்கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த
      நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான்
      நேமி அங்கை உளதே            (7)