3276முன் நின்றாய் என்று தோழிமார்களும்
      அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
சென்னி நீள் முடி ஆதி ஆய
      உலப்பு இல் அணிகலத்தன்
கன்னல் பால் அமுது ஆகி வந்து என்
      நெஞ்சம் கழியானே             (9)