3277கழிய மிக்கது ஓர் காதலள் இவள் என்று
      அன்னை காணக்கொடாள்
வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைதொழச்
      சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்
      ஆர்க்கும் அறிவு அரிதே (10)