3278அறிவு அரிய பிரானை
      ஆழி அங்கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி
      நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும்
      திருக்குறுங்குடி அதன்மேல்
அறியக் கற்று வல்லார்
      வைட்டவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே            (11)