3280 | கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும் கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும் கற்கும் கல்விச் செய்வேனும் யானே என்னும் கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும் கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும் கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ? கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன் கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே? (2) |
|