3281 | காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும் காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும் காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும் காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே என்னும் காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும் காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொலோ? காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் காண்கின்ற என் காரிகை செய்கின்றவே? (3) |
|