3283திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
      திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
      திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்
      திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
      திறம்பாது என் திருமகள் எய்தினவே?            (5)