3287கொடிய வினை யாதும் இலனே என்னும்
      கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
      கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
      கொடிய புள் உடையவன் ஏறக்கொலோ?
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
      கொடியேன் கொடி என் மகள் கோலங்களே?            (9)