3288 | கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும் கோலம் இல் நரகமும் யானே என்னும் கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும் கோலம் கொள் உயிர்களும் யானே என்னும் கோலம் கொள் தனிமுதல் யானே என்னும் கோலம் கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ? கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே? (10) |
|