331நீர் ஏறு செஞ்சடை நீலகண்டனும் நான்முகனும் முறையால்
சீர் ஏறு வாசகஞ் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல்
வார் ஏறு கொங்கை உருப்பிணியை வலியப் பிடித்துக்கொண்டு
தேர் ஏற்றிச் சேனை நடுவு போர் செய்யச் சிக்கெனக் கண்டார் உளர்            (5)