3325பெய்யும் பூங் குழல் பேய் முலை உண்ட பிள்ளைத் தேற்றமும்
      பேர்ந்து ஓர் சாடு இறச்
செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன்
      தாமரைக் கண்கள் நீர் மல்க
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே             (3)