3326கள்ள வேடத்தைக் கொண்டு போய் புரம் புக்க ஆறும்
      கலந்து அசுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறு அலாமை
      விளங்க நின்றதும்
உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே             (4)