3327உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த
      அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்தலும்
மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்து
      மணந்த மாயங்கள்
எண்ணும்தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே            (5)