3329ஒண் சுடரோடு இருளுமாய் நின்ற ஆறும் உண்மையோடு
      இன்மையாய் வந்து என்
கண் கொளாவகை நீ கரந்து என்னைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய
      மாணிக்கமே என் கண்கட்குத்
திண் கொள்ள ஒரு நாள் அருளாய் உன் திரு உருவே             (7)