333வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம் ஏந்து கையன்
உள்ள இடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல்கொடித் தேர்மிசை முன்புநின்று
கள்ளப் படைத்துணை ஆகிப் பாரதம் கைசெய்யக் கண்டார் உளர்             (7)