3339போற்றி யான் இரந்தேன் புன்னைமேல் உறை பூங் குயில்காள்
சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண்டூர் உறையும்
ஆற்றல் ஆழி அங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வது ஒருவண்ணமே             (6)