3347போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை
      நம்பீ நின் செய்ய
வாய் இருங் கனியும் கண்களும் விபரீதம் இந் நாள்
வேய் இரும் தடம் தோளினார் இத் திருவருள்
      பெறுவார் எவர்கொல்
மா இரும் கடலைக் கடைந்த பெருமானாலே?             (3)