முகப்பு
தொடக்கம்
3348
ஆலின் நீள் இலை ஏழ் உலகும் உண்டு அன்று நீ
கிடந்தாய் உன் மாயங்கள்
மேலை வானவரும் அறியார் இனி எம் பரமே?
வேலின் நேர் தடம் கண்ணினார் விளையாடு
சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே (4)