3349கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும்
      நன்கு அறியும் திண் சக்கர
நிழறு தொல் படையாய் உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின் அருள் சூடுவார்
      மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே             (5)