3353உகவையால் நெஞ்சம் உள் உருகி உன் தாமரைத்
      தடம் கண் விழிகளின்
அக வலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாம் அடு
      சிறு சோறும் கண்டு நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே             (9)