3368கேயத் தீம் குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும்
      கெண்டை ஒண் கண்
வாசப் பூங் குழல் பின்னை தோள்கள்
      மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான் தன் செய்கை
      நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு
      எவ் உலகம் நிகரே?             (2)