3369நிகர் இல் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும்
      நீள் நெடும் கைச்
சிகர மா களிறு அட்டதும் இவை
      போல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான் தன் செய்கை
      நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக்கு
      என் இனி நோவதுவே?             (3)