3370நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும்
      வஞ்சப் பெண்ணைச்
சாவப் பால் உண்டதும் ஊர் சகடம்
      இறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான் தன் செய்கை
      நினைந்து மனம் குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு
      என் இனி வேண்டுவதே?             (4)