முகப்பு
தொடக்கம்
3371
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும்
வீங்கு இருள்வாய்
பூண்டு அன்று அன்னைப் புலம்ப போய் அங்கு ஓர்
ஆய்க்குலம் புக்கதும்
காண்டல் இன்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச
வஞ்சம் செய்ததும்
ஈண்டு நான் அலற்றப்பெற்றேன் எனக்கு
என்ன இகல் உளதே? (5)