3372இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் இமில்
      ஏறுகள் செற்றதுவும்
உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும்
      உட்பட மற்றும் பல
அகல் கொள் வையம் அளந்த மாயன் என்
      அப்பன் தன் மாயங்களே
பகல் இராப் பரவப் பெற்றேன் எனக்கு
      என்ன மனப் பரிப்பே?             (6)