3373மனப் பரிப்போடு அழுக்கு மானிட
      சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டு உருக்கொண்டு தான் தன
      சீற்றத்தினை முடிக்கும்
புனத் துழாய் முடி மாலை மார்பன் என்
      அப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு
      இனி யார் நிகர் நீள் நிலத்தே?             (7)